ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சி வேங்கம்மையார் பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வறுமையில் வாடும் நரி குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் 70குடும்பத்தினர் மற்றும் பிற இனத்தை சார்ந்த 155பேர்களும் தங்க வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற மளிகை பொருட்களை அ.தி.மு.க சார்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
பின்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவரவர் தங்கியிருந்த இடத்திற்கு அனுப்பி வைக்க பட்டனர்.மேலும் கோபி நகராட்சியில் பணிபுரியும் 350தூய்மை பணியாளர் களுக்கு சீதா கல்யாண மண்டபத்தில் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது,வெளியூரில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவருடன் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இ பாஸ் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் எனவும், நாளை பள்ளி கல்வித்துறை சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்த பிறகு பத்திரிக்கையாளரிடம் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.
Tags:
மாவட்ட செய்திகள்