பெருந்தொழுவு ஊராட்சியில் கொரானா நிவாரணமாக 1500 குடும்பங்களுக்கு அரிசி பைகளை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் வழங்கினர்.
தமிழக முதலவர் எடப்பாடிகே.பழனிசாமி , துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், திருப்பூர் மாநகர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருந்தொழுவு ஊராட்சி கவுண்டம்பாளையத்தில், அ.தி.மு.க.சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரானா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி பைகளை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம் ஆனந்தன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்கள். இதில் பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சிவாச்சலம்'மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணை த்தலைவர் ராஜேஷ்குமார் சிவசாமி, மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் பொன்னுசாமி, பகுதி கழக செயலாளர் பண்ணையார் பழனிசாமி, விவசாய பிரிவு தலைவர் சிதம்பரம், இளைஞர் அணி துணைத்தலைவர் மோகன்ராஜ், பல்லடம் மார்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார் மற்றும் சுவுன்சிலர்கள் வடிவு, செல்வராஜ், சுப்பிரமணியம், தேவிகா, முத்துப்பரமேஷ்வரன், திலகவதி துரைசாமி, மற்றும் நிர்வாகிகள் தமிழரசு, பாலு, தர்மராஜ், சிவகுமார், அருண்மணி, துரைசாமி, குமார், தொழில் அதிபர்கள் லிங்க்ஸ் கல்வி குழுமம், ஆர்.பி.ஆர்.கார்மெண்ட்ஸ், சக்தி கார்டன், ஈஷா குரூப் மற்றும் கார்ப்பரேஷன் வங்கி மேலாளர் லட்சுமணன், என்.எஸ்.கே.நகர் சரவணன், பாசறை ஷாஜகான், அருண்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்