கோயிலில் திருவிழா செலவை தொழிலாளர்களுக்கு வழங்கிய பரமன்குறிச்சி ஆருள்மிகு மாயாண்டி சுவாமி திருக்கோயில் - 140 தொழிலாளர்களுக்கு உதவிகள்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 140 பல்வேறு தொழிலாளர்களுக்கு பரமன்குறிச்சி ஆருள்மிகு மாயாண்டி சுவாமி திருக்கோயில் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
பரமன்குறிச்சி பிரதான கடைவீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு மாயாண்டி சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கொடை விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் கோயிலில் திருவிழாக்கள் ஏதும் நடைபெறவி ல்லை.
இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் திருவிழாக்கள் நடத்த ஆகும் செலவினங்களை வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதையொட்டி இசைக்கலைஞர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட 140பேருக்கு அரிசி, காய்கனிகள், மளிகைப் பொருட்களை கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பரமன்குறிச்சி வீராட்சி மன்றத் தலைவர் லங்காபதி வழங்கினார்.
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்து கரோனா வைரஸை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என பேசினார். கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் முத்துலிங்கம், ஊராட்சி செயலர் சுந்தரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Tags:
மாவட்ட செய்திகள்