புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை... நடைபாதை வியாபாரிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் கடன்... சிறு விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்

கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான நிவாரணத் தொகுப்பை அறிவித்தார். அதில் என்னென்ன திட்டங்கள் அடங்கும் என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார்.


இன்று அவர் பேசியது:


இன்று இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசயிகள் பற்றி பேச இருக்கிறோம்.


இன்று 9 புதிய திட்டங்கள் பற்றி பேச இருக்கிறோம்.


3 கோடி விவசாயிகள்  நேரடி கடனாக 4 லட்சம் கோடி கடன்கள் பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.


25 லட்சம் விவசாயிகள் (kisan Credit card) கடன் அட்டைகள்  வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. 


விவசாயிகள், மற்றும் ஊரகப்பயனர்களுக்கு கடந்த சில மாதங்களில் உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 


ஊரடங்கு காலத்தில் ரூ.63 லட்சம்  விவசாயிகளுக்கு  கடன் வழங்கப்பட்டு உள்ளது. 


மாநில அரசுகள் வசம் 8700 கோடி விவசாயி கொள்முதலுக்காக வழங்கப்பட்டு உள்ளது.


கொரோனா காலத்தில் மத்திய அரசு வீடில்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கி உள்ளது. 


இக்காலகட்டத்தில் 12 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முககவசங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டு வழங்கபப்ட்டு உள்ளது.


7200 புதிய சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது. 


புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊர் திரும்பியதும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை வழங்கப்படும். 


அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை 


குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.


புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியம் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.


இதன்மூலம் 8 கோடி பேர் பயன்பெறுவார்கள்.


ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மூலம் 83% கார்டுதாரர்கள் பயன்பெறுவார்கள்.


நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.


 


 


Previous Post Next Post