காட்பாடியிலிருந்து மேற்குவங்க மாநிலத்திற்கு சிறப்பு ரயில்; 1,142பேர் மேற்குவங்க மாநிலம் புறப்பட்டனர்

நான்காவது ரயிலில் இன்று (11.05.2020) 1,142பேர் மேற்குவங்க மாநிலம் செல்ல சிறப்பு ரயிலில் சமூக இடைவெளியில் உடமைகள் கொண்டு செல்ல ரெட்கிராஸ் தொண்டர்கள் உதவினர்.

 


 

மார்ச்-24ஆம் தேதி முதல் மே-17வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ள காரணத்தினால் வடமாநிலத்தினை சார்ந்தவர் மருத்துவ சிகிச்சை பெற வேலூர் வந்தவர்கள் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் தங்கள் மாநிலத்திற்கு திரும்பி செல்ல இயலாத நிலையில் இருந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

முற்பகல்  12.00 மணி அளவில் மேற்குவங்க மாநிலம் ஹவுரா செல்லும் சிறப்பு ரயில் காட்பாடி ரயில்வே ஜங்ஷனிலிருந்து புறப்பட்டது.  அதில் பயணிக்க 1142 பயணிகள் காலை 8.30 மணி அளவில் இருந்து 11 மணி வரை சிறப்பு பேருந்துகள் மூலமாக ஒரு பேருந்துக்கு 25 முதல் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு 44 பேருந்துகள் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர்.

 

பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, இரண்டு வேளைக்கான உணவு குடிநீர் ஆகியவற்றை வழங்கி சமூக இடைவெளியோடு ரயில் பெட்டிகளில் அமர வைக்கப்பட்டனர். 

 

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 72 பேருக்கு பதிலாக 52 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப் படுகின்றனர்.  52 பேரும் சமூக இடைவெளியை பின்பற்றி பயணிக்க  அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். வருகை தந்த அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்து வந்திருந்தார்கள்.

 

ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளை ஒழுங்கு படுத்துவதற்காக வருவாய் துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, இரயில்வே துறையினருடன் இணைந்து இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் சி. இந்தர்நாத்  காட்பாடி கிளை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் துணைத் தலைவர் ஆர் ஸ்ரீநிவாசன். காந்தி பட்டேல் உள்ளிட்டோர் உடன் தன்னார்வ தொண்டர்கள் 45 பேர் பணியாற்றினர் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்கள் பாரத சாரணை சாரணிய ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

Previous Post Next Post