கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைய வேண்டி தி.மலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு தவில் - நாதஸ்வர குழுவினர் சங்காரபரணம் இசை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நாடே அச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைய வேண்டியும், உலக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியும் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு தவில், நாதஸ்வரவித்வான்கள் மூலம் அருணாசலேஸ்வரரை வேண்டி சங்காரபரணம் இசைத்தனர். இதில் தி.மலை கிரிவல நாதஸ்வர தவில் இசை சங்கத் தலைவர் கலைமாமணி டாக்டர் டி.ஆர்.பிச்சாண்டி தலைமையிலான குழுவினர் தவில் மற்றும் நாதஸ்வரத்தை இசைத்தனர். இவர்கள் காலை 9 மணி இதனை ஆரம்பித்து 9 நிமிடங்கள் வாசித்தனர். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.