பசிக்கொடுமையால் வீதிக்கு வந்த  வெளி மாநில கூலி தொழிலாளர்கள்

பல்லாவரம் அடுத்த நாகல்கேணி பகுதியில் பசிக்கொடுமையால் வீதிக்கு வந்த  வெளி மாநில கூலி தொழிலாளர்கள்



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் சென்னை பல்லாவரம் அடுத்து நாகல்கேணி பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வெளிமாநில  கூலி தொழிலாளர்கள் ஆதரவற்ற நிலையில் பசிக்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்ப்டட வெளி மாநில தொழிலாளர்கள் தோல் தொழிற்ச்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வருமானத்திற்க்கு வழி இல்லாமல் சாப்பாட்டிற்க்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.அம்மா உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட கூட முடியாத நிலையில் உள்ளனர்.தங்களது முதலாலிகளும் எந்த வித உதவிகளும் செய்ய வில்லை என்றும் சொந்த ஊருக்கு கூட போக முடியாமல் தவித்து வருகின்றனர் எனவே தமிழக அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Previous Post Next Post