பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணியினை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்



தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக நகராட்சி அலுவலகத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணியினை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், காவல் துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல், யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன்,  நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கோபி சட்ட மன்ற தொகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக முக கவசங்கள் மற்றும் முழு உடல் கவசங்கள்  வழங்கியும்,  இராட்சத கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தின் மூலம்  தொகுதி முழுவதும் தெளித்தும், தற்காலிக மார்க்கட் மற்றும் கோபி அரசு மருத்துவமனையில்  கிருமி நாசினி சுரங்க நடை பாதை அமைத்தும், தற்போது பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியும் வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக நொடிக்கு நொடி தீவிரம் காட்டும் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனை கோபி வாழ் பொது மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

 

 

 

 



 

Previous Post Next Post