தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, உட்பட அத்தியாவசிய பொருட்கள்; அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் வழங்கினார்



தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம்  சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டுபுள்ளம்பாளையம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களையும்,  முக கவசம், சானிடைசர் போன்றவற்றை  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் வழங்கினார். அருகில் கோட்டாட்சியர் ஜெயராமன்,  மாவட்ட கவுன்சிலர் அனுராதா,யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார்,ஊராட்சி செயலர் தமிழரசி,  துணை தலைவர் சுப்ரமணியம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

 



 

Previous Post Next Post