ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபி நகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பின் ஒரு பகுதியாக 24மணி நேர சேவையாக நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியது:
தனியாா் பள்ளிகளில் ஊரடங்கின் போது மாணவா்களின் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படுவது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் 90 சதவிகிதம் தயாா் நிலையில் உள்ளது.
முதல்வாின் அறிவுரைப்படி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடமாடும் காய்கறி வாகனசந்தை அமைக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தின் உதவியுடன் புதிய ராஷ்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினியை புகையாக தெளிக்கும் பணி தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும்
அமைச்சா் தொிவித்துள்ளாா்.இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர், நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி,நில வருவாய் ஆய்வாளர் ரஜிகுமார், முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன், சொசைட்டி தலைவர் காளியப்பன், மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் பிரினியோ கணேஷ், எம்.ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜி. எம். விஸ்வநாதன், நகர மாணவரணி செயலாளர் செல்வராஜ்,வேணுகோபால் மற்றும் சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.