கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் முகக்கவசம் விலை தாறுமாறாக உயர்ந்ததோடு, முகக்கவசம் கிடைக்காமல் பெரும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் நிறுவனர் பூ.திருமாறன் ஆலோசனையின் பேரில் டிரஸ்ட் ஊழியர்கள் திலகவதி மற்றும் சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் கணேசன், மாரிச்செல்வம், சுகுமார், சுரேஷ், சிவா, பூரணி, சுப்புலட்சுமி, முத்துப்பேச்சி, தங்க புஷ்பா, ஆகியோர் முக கவசம் தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தயாரித்து வருகிறார்கள்.
இங்கு தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பணியாளர்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை செய்துவரும் பணியாளர்கள் மற்றும் கிராமங்களில் வாழும் ஏழை எளிய பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் நிறுவனர் பூ.திருமாறன், செங்கோட்டை ராம்மோகன்,
ஏ.பி.நாடாரூர் தர்மா, டாக்டர் சுமித்ரா, கனகம்மாள், பல் டாக்டர் அரிச்சந்திர ராஜா, டாக்டர் விஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முக கவசங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆதிநாராயணன் ரவிக்குமார் ஆகியோர் வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் நிறுவனர், நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
Tags:
மாவட்ட செய்திகள்