திருப்பூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் காலை முதலே வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள 3 நாட்கள் முழு ஊரடங்கு திருப்பூரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு வெளியில் செல்வதை தடுக்கும் வண்ணம் மருந்தகங்கள் மூன்று நாட்களும் முழுமையாக அடைக்கப்பட்டன.
மாநகர எல்லைக்குள் ஊரடங்கை மீறியதாக மாலை 4 மணி நிலவரப்படி 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்களும் பெரும்பாலோனோர் வீடுகளில் முடங்கி இருப்பதால் கடந்த 30 நாள் ஊரடங்கை விட இன்று திருப்பூர் மிகவும் அமைதியான நகரமாக இருந்தது.
திருப்பூரில் கறிகடைக்காரர்கள் நேற்று இரவிலிருந்து அதிகாலை வரை கடைகள் வைத்து வியாபாரம் செய்தனர். வீடுகளுக்கு இறைச்சி டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், போன் செய்தாலும் யாரும் இறைச்சி டெலிவரி செய்யவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மருந்துக்கடைகளும் மூடப்பட்டு இருந்ததால், மருந்து வாங்க கூட ஆட்கள் வராமல் திருப்பூர் முழு அமைதி கொண்டிருந்தது.
கொரோனாவின் பரவலை தடுக்க அரசு அறிவித்த முழு ஊரடங்கால் திருப்பூர் மாநகரம் அமைதிகொண்டு இருந்தது. வாகனச்சத்தமின்றி ஆங்காங்கே காக்கை குருவிகளின் சப்தம் கேட்டுக்கொண்டு இருந்தது.
மொத்தத்தில் எந்த நேரமும் உழைக்கும் திருப்பூர் மக்களை அடங்க வைத்து விட்டது இந்த கொரோனாவும்.. அதை தவிர்க்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும்...
கழுகுப்பார்வையில் திருப்பூர்:
தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வரும், திருப்பூர் ரயில்வே மேம்பாலம் சோர்ந்து போய் வளைந்து கிடக்கிறதோ.?
கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவில் காலியாய் கிடக்கிறது திருப்பூர் குமரன் ரோடு.
திருப்பூர் மாநகராட்சி சந்திப்பை இப்படி ஒரு காட்சியில் இனி நீங்கள் பார்க்கவே முடியாது.
ஆளே இல்லாமல் காலியாய் கிடக்கும் ரோடு.. பின்னணியில் தெரியும் நொய்யல் ஆறு மற்றும் வளர்மதி பாலம்.
இதாங்க திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டும், அதுக்கு பக்கத்துல இருக்கற மேம்பாலமும்.. பின்னணியில் பரந்து விரிந்து கிடப்பது நம்ம திருப்பூரின் தெற்குப்பகுதி.
பழைய பஸ் ஸ்டாண்ட் மற்ற்றும் அதன்முன்புறம் காமராஜர் ரோட்டில் உள்ள மேம்பாலம்.
படம் எடுத்தவருக்கே அடையாளம் தெரியலியாம்.. மாநகராட்சி சந்திப்பு தாங்க இது..
பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாலம் முடியும் இடத்தில் பல்லடம் ரோடு துவக்கம்..
இது பழைய பஸ் ஸ்டாண்ட்-தாராபுரம் ரோடு சந்திப்பு... பழைய அரசு ஆஸ்பத்திரி, பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் புதிய கோணத்தில்..
வெள்ளக்காரன் ரயில் விட்டதுக்கு அப்புறம்., 150 வருசம் கழிச்சு இப்பத்தான் பூட்டிருக்காங்க... இது திருப்பூர் ரயில் நிலையம், பின்னணியில் தெரிவது புஷ்பா தியேட்டர் சிக்னல்.
ரயில் செல்லும் தண்டவாளமும், ரயில்வே மேம்பாலமும்..
ரயில் நிலையம்.
பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் அவிநாசி ரோடு..
இதாங்க பிஷப் ஸ்கூல் சிக்னல்
இது புது பஸ் ஸ்டாண்ட்.. கட்டிடம் மட்டும் தான் இருக்குது.. ஆளே இல்ல..
பெருமாநல்லூர் ரோடு, நெசவாளர் காலனி பஸ் ஸ்டாப்.
ரயில்வே மேம்பாலத்தின் இன்னொரு காட்சி.
இது திருப்பூர் தாராபுரம் ரோடு.
குமரன் ரோடு.