தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகையே உலுக்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகமே வியக்கும் வண்ணம் செயற்கரிய செயல்களை புரிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த நாடுகளும் எதிர்பாராத வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். கொரோனாவால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் பல கோடி உயிர்களைக் காக்கும் பொருட்டு செம்மையான நடவடிக்கைகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
அவரது கரத்தை வலுப்படுத்தவும் பலப்படுத்தவும் நாட்டின் எதிர்காலத்தை முன்னிட்டும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நிவாரண நிதிக்கு நானும் என்னால் இயன்ற தொகையை அனுப்பி உள்ளேன். இதுபோன்று இந்தியர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னால் இயன்ற நிதி உதவியை பாரதபிரதமர் நிவாரண த்துக்கும் தாங்கள் நேரடியாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி சமையல் பொருட்கள் மூலமாகவும் உணவாகவும் உதவிட அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:
மாவட்ட செய்திகள்