சென்னை கோயம்பேட்டிலிருந்து வேப்பூர் பகுதிக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூன்று தினத்திற்கு முன்பு மூடப்பட்டது. கோயம்பேடு பகுதியில் வேலை செய்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சியைச் சேர்ந்த இருவருக்கு
கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக சென்னையிலிருந்து அறிவிக்கப்பட்டது.
இதனையறிந்த வேப்பூர் போலீசார், திட்டக்குடி வட்டாட்சியர், மற்றும் மங்களூர் வட்டார வாளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் அதிகாரிகள் அவர்களை தனிமைப்படுத்தி ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், திட்டக்குடி தாசில்தார் செந்தில் வேல் தலைமையிலான அதிகாரிகள் கிராம வழித்தடங்களை மூடி, கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டனர்
அதனை தொடர்ந்து, வேப்பூர் சுற்றுப்புற கிராமங்களில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களை பிடித்து பரிசோதனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.