பழனி திருக்கோயில் யானை கஸ்தூரிக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கஸ்தூரி யானை தேவஸ்தான நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த கஸ்தூரி யானை திருவிழா காலங்களில் மக்களின் முன்னிலையில் பட்டாடை பொருத்தப்பட்டு அழகாக வளரச் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் கொரோனோ தொற்று ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் கஸ்தூரி யானைக்கு கொரோனோ நோய் தொற்று உள்ளதா என்று மாவட்ட வன அலுவலர் வித்யா தலைமையில் மருத்துவர் குழு மூலம் கஸ்தூரிக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவி இயக்குனர் சுரேஷ், மருத்துவர் முருகன், உதவியாளர் ராஜா, பழனி வனச்சரக அலுவலர் விஜயன், வனவர் சேது ராஜன், திருக்கோயில் நிர்வாகி நெய்காரபட்டி முருகேசன், நிர்வாகி சந்திரசேகரன், மற்றும் யானை பாகன்கள் பிரசாந்த், சங்கரன் குட்டி, ஆகியோர்கள் முன்னிலையில் இந்த பரிசோதனை நடைபெற்றது.
மேலும் மாவட்ட வன அலுவலர் வித்யா கஸ்தூரி யானைக்கு கொடுக்கப்படும் உணவுகள் பற்றியும் கஸ்தூரி யானை பராமரிக்கப்படும் விதங்கள் பற்றியும் இரவில் உறங்குவதற்கு நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடங்களை பற்றியும் யானை காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களையும் யானை குளிக்குமிடம் சவரம் மூலம் குளிக்குமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். மேலும் கஸ்தூரி யானை மாதமாதம் சரியான முறையில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றதா? யானை பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பாகன்கள் சுத்தமான முறையில் இருக்கிறார்களா? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆய்வு செய்தார். கஸ்தூரி யானை சார்ந்த சான்றுகள், உரிமம், காப்பீடு, உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தார். இதில் கஸ்தூரி யானை நல்ல முறையில் உள்ளது யானைக்கு கொரோனோ தொற்று இல்லை சரியான முறையில் பராமரிக்கப்படுகிறது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
Tags:
மாவட்ட செய்திகள்