ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் தினக்கூலி அலுவலக பணியாளர்கள் உட்பட 30நபர்களுக்கு மருத்துவ காப்பீடு, அரிசி சிப்பம் மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு முக கவசம், கபசுர சூரணம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
மேலும் ஊராட்சி முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது .
இதில் கோட்டாசியர் ஜெயராமன்,யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர், ஊராட்சி மன்ற தலைவர் வனிதா வேலுசாமி, ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன், ஊராட்சி கழக செயலளார் அண்ணாத்துரை,ஊராட்சி செயலர் சதீஸ்குமார் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.