உழவர் சந்தை விலையில் உள்ளூரில் காய்கறிகள்; பொது சேவையில் அசத்தும் ராஜேஷ்வரி

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறிகள் வாங்க மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். விலைகளிலும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரகாளிபுரத்தை ராஜேஷ்வரி என்பவர் உழவர் சந்தையில் மொத்தமாக காய்கறிகள் வாங்கி வந்து லாபநோக்கம் இல்லாமல் அந்த விலைக்கே பிரித்து மக்களுக்கு வழங்கி வருகிறார். 


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இவர் ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் பொது மக்களுக்கு பல வழிகளில் உதவி வருகிறார். ரோட்டோரம் ஆதரவற்றவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கிறார். தனது நண்பர்களின் உதவியுடன் 25கிலோ அரிசி சிப்பம் சுமார் 70 நபர்களுக்குமேல் வழங்கியுள்ளார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


தேவை படுவோருக்கு மளிகை பொருட்களும் வழங்குகிறார். கஷ்ட்டப் படுபவர்களை விசாரித்தும் நண்பர்களின் பரிந்துரையின் பேரிலும் தேடி சென்று உதவி வருகிறார். இவரின் இந்த செயல்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள் என்று அணைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 


Previous Post Next Post