தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் தொடர் 144 ங்கு ஊரடங்கு உத்தரவினை மற்ற மத்திய மாநில அரசுகள் பிறபித்துள்ளன இதில் சில மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் சென்னை, கோவை ,மதுரை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் 26 காலை இன்று வரை 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்திரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதனால் மருத்துவ சேவைகள்,அத்தியவாசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கபடும் என்றும் பால் மற்றும் காய்கறிகள் வீட்டிற்கே வந்து விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் தடை உத்திரவை மீறி வரும் மற்ற வாகங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.இதனை அடுத்து சென்னையின் நுழை வாயிலான பெருங்களத்தூர் வண்டலூர் பகுதியில் உள்ள இரணியம்மன் கோவில் அருகே சோதனை சாவடி அமைக்கபட்டு போலிசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் தாம்பரம் சேலையூர் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் கேளம்பாக்கம் குரோம்பேட்டை பல்லாவரம் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் மருத்துவ சேவைகள் மற்றும் அதியவாசிய பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்கள் அனுமதிக்கபட்டன மேலும் தேவையின்றி வந்த வாகனங்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.