தூத்துக்குடி போல்டன்புரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெரு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடிமைக்கப்பட்டுள்ள நடமாடும் கொரோனா ரத்தமாதிரி சேகரிப்பு மைய வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 22 பேருக்கு கரோனா தொற்று இருந்தநிலையில் நேற்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது இதையெடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி போல்டன்புரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடியிருப்பு தெரு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் கொரோனா மாதிரி சேகரிப்பு மைய வாகனத்தில் அப்பகுதி பொதுமக்களிடம் சளி, ரத்தம் மாதிரி சேகரிக்கப்பட்டது.
பின்னர் ரத்தமாதிரி சேகரிப்பு மைய வாகனத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.