போலீசாரின் ’கொரோனா குத்து’: சமூக வலைத்தளங்களின் செம கெத்து’

 கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக போலீசார் பாடி, ஆடிய ‘கொரோனா குத்து’ சமூக வலைத்தளங்களில் ‘செம கெத்தாக” உலா வருகிறது



அயராத கொரோனோ தடுப்பு பணிகளில்ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தி கொரோனோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 


 


வீடியோ இதோ:



இதனிடையே விருதுநகர் அருகே ஆமத்தூர் போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு ரமேஷ், நம்பிராஜன் மற்றும் பயிற்சி போலீசார் கொரோனா விழிப்புணர்வுக்காக பாடல் பாடி, நடனம் ஆடிட முடிவு செய்தனர்.


அவர்கள் நடிகர் வடிவேலு பாடிய ’வாடி பொட்டப்புள்ள’ என்ற குத்து  பாடல் மெட்டுக்கு கொரோனோ விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி பாடி உள்ளனர். மேலும் அந்த பாடலுக்கு நடனமாடி உள்ளனர். ’சைனாவில் பிறந்த கொரோனா.. நம்மள ஆட்டி வைக்க வந்திருக்குது எமனா..” என்று தொடங்கும் விழிப்புணர்வு பாடலுக்கு போலீசார் ஆடிய நடனம் அனைவரையும் கவர்வதாக உள்ளது. 


இந்த பாடலுக்கு நடனமாடிய போலீசார் கைகளில் கிளவுஸ் அணிந்தும், முகத்தில் மாஸ்க் அணிந்தும் விழிப்புணர்வு வாசகங்களை மெட்டுக்கு ஏற்றபடி அமைத்து பாடி ஆடுவது பொதுமக்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணம்  உள்ளது.  


போலீசார் பாடி, ஆடி வெளியிட்ட இந்த ’கொரோனா குத்து” இப்போது சமூக வலைத்தளங்களில் ‘செம கெத்தாக” உலா வருகிறது.


பாராட்டுக்கள் போலீஸ் நண்பர்களே!


Previous Post Next Post