ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாடு!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் இவருடைய வீட்டில் ஆடு ஒன்று வளர்த்து வருகின்றார்.  அந்த ஆடு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நான்கு குட்டிகளை ஈன்றது.


  பிறந்த சில நாட்கள் மட்டுமே குட்டிகளுக்கு பால் ஊட்டிய ஆடு, அதன் பிறகு பால் சுரக்காததால் பாலூட்ட முடியவில்லை.


இதனால் பால் கிடைக்காமல் பசியோடு இருந்த நான்கு ஆட்டுக்குட்டிகளும் அதே வீட்டில் இருந்த பசுமாட்டின் மடியில்  பால் குடித்து உள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட பசுமாடு தினந்தோறும் ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டது.


காலையில் மேய்ச்சலுக்கு செல்லும் முன் ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுப்பதும், மாலை மேய்ச்சலுக்கு சென்று வந்த பிறகு நேராக ஆட்டுக்குட்டிகள் இருக்கும் இடத்திற்கு செல்லும் பசுமாடு,  நான்கு ஆட்டுக்குட்டிகளுக்கும் பாலூட்டி விட்டுதான் அதன் இருப்பிடத்திற்கு செல்லுகின்றது.


பசுமாடு தனது கன்றுக்குட்டியை விட ஆட்டுக்குட்டிகளுக்கு பாசத்தோடு பாலூட்டுவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்


Previous Post Next Post