கனமழை மற்றும் சூறாவளிக்காற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட  நம்பியூா் ஒன்றியத்தில் உள்ள  அஞ்சானூா்,  புதுப்பாளையம்,  பட்டிமணியகாரன்பா ளையம், இருகாலூா் உள்ளிட்ட பகுதிகளில்  பெய்த கனமழை மற்றும் சூறாவளிக்காற்றினால் 5000க்கும்  மேற்பட்ட வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் மற்றும் 24வீடுகள் சேதமடைந்துள்ளதை தமிழக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்க கணக்கெடுப்பு பணியை தீவிரப்படுத்தியதோடு சேதமடைந்துள்ள 24 வீடுகளுக்கும்  தலா ரூ.10 ஆயிரம் ரொக்கத்தினை  அமைச்சர்  தனது சொந்த செலவில்  வழங்கி ஆறுதல் தொிவித்தாா்.


தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்களுக்கு முகக்கவசம்(மாஸ்க் ) வழங்கினார். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார் வெங்கடேசன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி (எ )சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா, பி டி ஓ பாவேசு,யூனியன் சேர்மன் சுப்பிரமணியம், எலத்தூர் பேரூர் கழக செயலாளர் சேரன் சரவணன்,  அஞ்சானூர் தமிழரசி பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post