துப்புரவுப்பணியாளர்கள் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்: முதலிபாளையம் ஊராட்சித்தலைவர் மயூரி பிரியா நடராஜ் வழங்கினார்

திருப்பூர் ஓன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில்    துப்புரவுப்பணியாளர்களுக்கும், தூய்மை களப்பணியாற்றுபவர்களுக்கும் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


 மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள்  குடும்பங்களுக்கும்  உதவும் விதத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் என். மயூரிபிரியா நடராஜ் உணவு பொருட்களை வழங்கினார். 


இதில் அவரது சொந்த நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒரு குடும்பத்திற்கு தேவையான 10 கிலோ அரிசி சிப்பம், பருப்பு, சமையல் ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ரசாயனம் கலக்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட முககவசம், கையுறை ஆகியவைகளை ஊராட்சி அலுவலகத்தில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அவர் வழங்கினார்.


அதில் ஊராட்சி செயலர் ராஜசேகர், துணை தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


Previous Post Next Post