வேப்பூர் அருகிலுள்ள நல்லூரில் அனுமதியின்றி வியாபாரிகள் காய்கறி வாரசந்தை தொடங்கியதால் போலிசார் மூடினார்கள்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த நல்லூரில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை வாரச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவை மத்திய , மாநில அரசுகள் பிறப்பித்ததுள்ளது.
அதனால் வாரச்சந்தை உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட மாநில அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வேப்பூர், விருத்தாசலம் வாரசந்தைகள் மூட பட்டன
ஆனால், நேற்று செவ்வாய்க்கிழமை காலை நல்லூரில் வழக்கம் போல் வாரச்சந்தை கூடியது
அதனால் மக்கள் காய்கறிகள் வாங்க அதிகளவில் திரண்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மக்களை விரட்டி அடித்தார்.
மேலும், வியாபாரிகளிடம் அரசு உத்தரவு குறித்து விளக்கம் அளித்து கலைந்து செல்ல அறிவுறுத்தி, வாரச்சந்தையை முடக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.