நாடு முழுவதும், இன்றைய நிலவரப்படி 31,787 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,318 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் மொத்த பாதிப்பு 495 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 2,162 ஆனது.
சென்னையில் 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 768 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று 2பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,210 பேர் குணமடைந்து உள்ளனர்.
இன்னும் 952 பேர் தான் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் இன்று 32 மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்று இல்லை.
நிலைமை இப்படி தொடரும் நிலையில், வெளிமாநிலத்தவர்கள் சொந்த மாநிலம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள், மாணவர்களும் சொந்த மாநிலம் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால்,மே-3 ந்தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்வு செய்யப்படும், என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் சனிக்கிழமை தமிழக அமைச்சரவை கூடி அதுகுறித்த முடிவு எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலகளவில் அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தி வரும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் மட்டும் 10.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 59 ஆயிரத்து 200க்கும் மேற்ப்பட்டோர் இறந்துள்ளனர். இது வியட்நாம் போரில் இறந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை விட அதிகம்