சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வண்ணம் புதிய முறையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஒத்துழைப்பு தந்தமைப்பு நன்றி
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 835 பேர் மட்டும் தான். மொத்தமாக இன்று 7,707 பேருக்கு சோதனை செய்து இருக்கிறோம். இதுவரை 80,110 மாதிரிகள் சோதனை செய்து இருக்கிறது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 66 பேர், ஆண்கள் 38 பேர்: பெண்கள் 28 பேர்.மொத்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்து உள்ளது.
41 பரிசோதனை மையங்கள் வைத்திருக்கிறோம். ஒரே நேரத்தில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை பரிசோதனை செய்ய முடியும்.
இன்று மட்டும் 94 பேர் குணமைடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுவரை 960 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
மத்திய குழுவே நம்மை பாராட்டி உள்ளனர். சிகிச்சையில் மீள்பவர்கள் விகிதம் 52 சதவீதமாக உள்ளது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் விழுக்காடு அதிகரித்துள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
சென்னையில் 43 காஞ்சி 7 தென்காசி 5, செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலையில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.