திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக, போலீஸ் எஸ்.பி., திஷா மிட்டல் உத்தரவுப்படி,
கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டியும், கொரோனா வைரஸ் பாதிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தும், அன்பாக எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போது ரோட்டில் தேவையின்றி சுற்றித் திரிபவர்கள் மீது இதுவரை 5611 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6176 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 5765 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது மேலும் மதுவிலக்கு பிரிவில் 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக பொதுமக்களுக்கு பின்வரும் அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது:
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், காய்கறிகளையும் ஒரு வார காலத்திற்கு தேவையான அளவில் ஒரே முறையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒருவர் மட்டுமே முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் வருவோர் ஒருவர் மட்டும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்களைப் மனித நேயத்துடன் நடத்த வேண்டும்.