சுரண்டை அருகே உள்ள ஊத்துமலையில் சாராயம் காய்ச்சுவதற்காக போட்டு வைத்திருந்த ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். 6பேர் கைது செய்யப்பட்ட னர்.
தெற்கு பனவடலிசத்திரத்தை சேர்ந்த ராமையா என்பவருக்கு ஊத்துமலை அருகில் உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்திற்கு அருகே காட்டு பகுதியில் வயல் உள்ளது. இப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருப்பதாக ஊத்துமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர் அப்போது அங்கு 20 லிட்டர் பிளாஸ்டிக் குடத்தில் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்டு வைத்து இருப்பதை கண்டனர்.
'தொடர்ந்து போலீசார் விசாரணை யில் பனவடலி சத்திரத்தை சேர்ந்த சேர்ந்த ராமையா மகன் காளிமுத்து(8), சண்முகையா மகன் தங்க முத்து(40), முத்தையா மகன் தங்கராஜ் (32), வேல்சாமி மகன் முருகன் (35), மாரிமுத்து மகன் காளிமுத்து(30), வெள்ளையன் மகன் பாண்டியராஜ்(38) ஆகியோர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டுவைத்திருப்பதை அறிந்து அதனை அழைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊத்துமலை இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.
Tags:
மாவட்ட செய்திகள்