திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் ’ரெட் ஜோன்’ பகுதியாக உள்ளது. இங்கு இதுவரை 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் விறுவிறுவென உயர்ந்தது. மாவட்டத்தில் 110 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் திருப்பூர் உள்ளது.
இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வீட்டுக்கு செல்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முந்தினம் 15 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். நேற்று 18 பேர் குணமடைந்தனர். இன்று மேலும் 13 பேர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு செல்கின்றனர்.
இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 58 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். தற்போது 52 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகைகளுக்கு செய்தி தருவதற்கு முன்பே தனது சமூக வலைத்தள ரசிகர்களுக்கு, தகவல்களை அளித்து எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பவர் நமது திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 7 மணி நிலவரப்படி இன்னும் 49 பேர் தான் சிகிச்சை பெற்று வருகிற்ரார்கள்.