5000 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்




தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் குடியாத்தம் தமிழ் நாடு அரசு போக்குவர்த்து டிப்போ எதிரில் உள்ள மகாலட்சுமி மெட்டல் ராஜமாணிக்கம் திருமண மண்டபத்தில் குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜெ.கே.என்.பழனி  அவர்களின் தலைமையில், கழக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்களின் பங்களிப்போடு குடியாத்தம் நகரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசின் ஊரடங்கு உத்தரவால் தொழில்களை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் 5கிலோ அரிசியினை வழங்கினார்.கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.லோகநாதன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ஒன்றிய செயலாளர் டி.சிவா, நகர கழக துணை செயலாளர் ஆர்.மூர்த்தி, வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி மற்றும் குடியாத்தம் நகர கழக செயலாளர்  ஜே.கே.என்.பழனி ஆகியோரின் சொந்த செலவில் (24.4.2020) முதல் ஊரடங்கு உத்தரவு முடியும் மே 3 ம்தேதி வரை குடியாத்தம் நகரில் செயல்படும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்படும் அம்மா உணவகத்திற்கு வருகை தந்து உணவு தயாரிக்கப்படும் இடங்களையும் உணவின்.தரத்தையும் ஆய்வு செய்தார். பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டார். தூய்மை பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவச உணவினை வழங்கினார்.


 

 



 

Previous Post Next Post