அத்தியந்தல் ஊராட்சியில் 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகளில் சுகாதார துறை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியந்தல் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் ராதே சைதன்யா பிரந்தாவன் டிரஸ்ட், அரிஷ் லைட் அவுஸ் சார்பில் ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று அத்தியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் இரா.முருகன் அத்தியந்தல், சின்னகோட்டாங்கல், பெரியகோட்டாங்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கியதோடு கிருமிநாசினி முகக்கவசம் கையுறை கொரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். அப்போது அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் கொரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அத்தியந்தல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.கே.இபாபத்அலி, ஊராட்சி செயலாளர் எம்.ராஜ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.