கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் இயங்கிவரும் அசார்ட் இணையதள நிறுவனத்தில் பவித்ரன்,சுரேஷ்,ஆகாஷ் ராஜ்,உதயகுமார் உள்ளிட்ட 12 இளைஞர்கள் பணி புரிந்து வந்தனர்.இவர்கள் அனைவரும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.ஊரடங்கு உத்தரவின் காரணமாக இவர்கள் பணி புரிந்து வந்த நிறுவனம் மூடப்பட்டது.அதனால் தங்கள் கைகளில் இருந்த பணத்தை வைத்து நாட்களை சமாளித்து வந்தனர்.இந்நிலையில் கைகளில் இருந்த பணம் முடிந்ததால் தங்களது சொந்த மாவட்டமான நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு நடைபயணமாக செல்ல முடிவெடுத்தனர்.அதன் படி நடைபயணமாக பல்லடம் நகரை கடந்து சென்ற போது வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் தாங்கள் அனைவரும் சொந்த ஊர் செல்ல (21.04.2020) இரவு முதல் நடைபயணமாக செல்வதாக வழிதெரியாமல் காட்டுவழியாக வந்ததாக தெரிவித்தனர். பின் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு பி.எம்.ஆர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின் இ பாஸ் விண்ணப்பம் செய்யப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம், தலைமையில் DSP முருகவேல், ஆகியோர் முயற்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கரைப்புதூர் A.நடராஜன் MLA முன்னிலையில் சுற்றுலா வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு 12 பேரையும் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.தங்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்து குடுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இளைஞர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்