கண்ணநல்லூர் அருகே நம்பியாற்றின் குறுக்கே ரூ4.64 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை: தமிழக முதல்வருக்கு இன்பதுரை எம்எல்ஏ நன்றி


ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருபபதாவது:−


நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூர் அருகே புதிய தடுப்பணை ஒன்று அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.


இது குறித்து நான் சட்டமன்றத்தில் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி  பேசிவந்தேன்


கடந்த 12-11-17 அன்று நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்ணன் நல்லூரில்  புதிய தடுப்பணை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.


 இந்த நிலையில் தற்போது தமிழக அரசு கண்ண நல்லூர் அருகே நம்பி ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியே 64 லட்சம் செலவில் புதிய தடுப்பணை ஒன்று கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அதற்கான அரசாணையும் பிறப்பித்து உள்ளது.


களக்காடு ரிசர்வ் பாரஸ்ட் இருந்து உருவாகும் நம்பியாறு சுமார் 48 கிலோமீட்டர் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் தொகுதி வழியாக  பாய்ந்து சென்று தோட்டாவிளை கிராமம் ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே கடலில் கலக்கிறது. சுமார் 3 ஆயிரத்து 627 ஹெக்டேர் நிலம் நம்பியாறு மூலமாக பாசன வசதி பெறுகிறது.


 கண்ணநல்லூரில் தற்போது அமைக்கப்படவுள்ள இந்த புதிய தடுப்பணை மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதுமட்டுமல்லாமல் சுமார் 404 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.


 எனவே கண்ணநல்லூர் வட்டார விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் விவசாயிகளின் தலைமகன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியாரின் இந்த அறிவிப்பின் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


எமது கோரிக்கையை ஏற்று தடுப்பணை அமைப்பதற்கு ரூ.4 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பணை கட்ட ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு  ராதாபுரம் தொகுதி பொதுமக்கள் சார்பிலும் கண்ணநல்லூர் வட்டார விவசாயிகள் சார்பிலும் எனது சார்பிலும் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் இன்பதுரை எம்.எல்.ஏ கூறியுள்ளார்


Previous Post Next Post