கொரோனா  நிவாரண அரிசி கடத்தல் 2 பேர் கைது



ஈரோடு சிவகிரி சின்னியம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில்  கொரோனா நிவாரணத்திக்காக மக்களுக்கு வழங்கப்பட இருந்த200 கிலோ ரேசன் அரிசியை சரக்கு ஆட்டோவில் கடத்துவதாக மாவட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்  திலகவதி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அங்கு உள்ள ரேஷன் கடை முன்பு புறப்பட தயாராக இருந்த ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அதில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து ரேஷன் கடை ஊழியரான சிவகிரி வி.ஐ.பி. நகரை சேர்ந்த வேலாயுதம் (வயது 43) சரக்கு ஆட்டோ டிரைவர் சிவகிரி காந்திஜி நகரை சேர்ந்த சிந்தாமணியின் மகன் அருண்  (வயது24) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் அவர்களிடம் இருந்து 200 கிலோ ரேஷன் அரிசி சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சரக்கு ஆட்டோவின்  உரிமையாளரான பாலமேடு புதூரை சேர்ந்த கனகராஜ் போலீசார் தேடி வருகிறார்கள்.


Previous Post Next Post