தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 49 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 1372 ஆக உள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 49 பேரில் 28 பேர் திருப்பூர் மாவட்ட்டத்தை சேர்ந்தவர்கள்.
ஏற்கனவே 80 பேர் இருந்த நிலையில், இன்று 28 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் திருப்பூரை சேர்ந்த 19 பேர், அவிநாசியை சேர்ந்த 4 பேர், பல்லடத்தை சேர்ந்த 2 பேர், பொங்கலூர், உடுமலை, காங்கயத்தில் தலா ஒருவர் என 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 9 பேர் பெண்கள்; 17 பேர் ஆண்கள்.
(படம்: திருப்பூர் வடக்கு போலீஸ் சார்பில் உதவி கமிஷனர் வெற்றி வேந்தன், திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி புது பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது)
-------------------------------------------------------------------------------------------------------------------
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 10 பேர் 10 வயதுக்குட்ப்பட்டவர்கள் என்று இருந்தது. இதில் ஒரு வயது குழந்தை ஒன்றும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று 18 மாத ஆண்குழந்தை, இரண்டரை வயது பெண் குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 10 வயதுக்குள் கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 12 ஆகி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.