திருமுருகன்பூண்டி பேரூராட்சி 15 வார்டுகளிலும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி: செயல்அலுவலர் குணசேகரன் துரித நடவடிக்கை

 

                திருப்பூர், திருமுருகன்பூண்டி முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் பரமன் முன்னிலையில் தூய்மை தொழிலாளர்கள் குழுவினர் விஷேச உடையுடன் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தொடர்ந்து கொரோனா தொற்று நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணியை தீவீரமாக செய்து வருகிறார்கள். 


                நேற்று தேவராயம்பாளையம் பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது. இன்று 7 வது வார்டு நெசவாளர் காலனி, நெசவாளர் காலனி விரிவாக்கம், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் உள்ள லைன் வீடுகள், சூர்யா நகர் பிரிவு, ரிங் ரோடு, திருமுருகநாதர் சுவாமி  கோவில் சுற்றுப்பகுதிகள் உள்பட பல பகுதிகளில் கொரோனா  தொற்று நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது.

               அதேபோல் 8 வது வார்டு பகுதிகளிலும், 12,13,14 ஆகிய வார்டு பகுதிகளிலும்   கொரோனா  தொற்று நோய் தடுப்பு மருந்து அடிக்கப்பட்டது. மேலும் பூண்டி போலீஸ் நிலையம், கோவில்கள், மசூதி மற்றும் பொதுமக்கள் அதிகமாக  கூடும் இடங்களிலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.  
               இதுகுறித்து பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது :- திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும்  கொரோனா தொற்று நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக 2 வேன்களில் சரியான விகிதத்தில் குளோரின் கலக்கப்பட்டு 5 கை ஸ்பிரே மிஷின் மூலம் சுமார் 30 க்கும் மேற்பட்ட தூய்மை தொழிலார்கள் இப்பணியை செய்து வருகிறார்கள். 

               நோய்க்கான அறிகுறி இருப்பது குறித்து யாராவது தகவல் கொடுத்தால் அந்த வீட்டை அல்லது அப்பகுதியில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாநில அரசு கூறும் வரை  கொரோனா தொற்று நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Previous Post Next Post