ஒரே நாளில்சென்னையில்138 தமிழகத்தில்161...லாக்டவுன் கெடுபிடிகளை கடுமையாக்கும் கொரோனா

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா தொற்று நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை: நாடு முழுவதும் 33000 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 138 பேர் சென்னைக்காரர்கள். சென்னையில் அதிவேகமாக கொரோனா தொற்று பரவுவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்த எண்ணிக்கை 2,323 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


சென்னை கோயம்பேட்டில் காவல் ஆய்வாளர் உள்பட பூக்கடையில் வேலை செய்யக்கூடிய 5 பேருக்கு கொரோனா முதல்நிலை தொற்றாக ஏற்ப்பட்டு உள்ளது. பழக்கடை ஒன்றில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த 9 பேருக்குமே முதல்நிலை தொற்றாக உள்ளது. 


சென்னையில் அதிகளவில் பரிசோதனை செய்யப்படுவதால் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் தமிழக அரசின் செய்திக்குறிப்பின்படி முதல்நிலைத்தொற்று எனக்குறிப்பிடப்பட்டுள்ள பலர் எங்கிருந்து நோய் பெற்றார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை. 


 



இதைக்கட்டுப்படுத்த மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக முதல்வர் சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக்குழுவினர் தமிழ்நாட்டில்  லாக் டவுன் தளர்வினை முழுமையாக செய்ய முடியாது. சில தளர்வுகள் செய்யப்படலாம். 


லாக் டவுன் நீக்கப்படும் நிலை வரும் போதும் முழுமையாக நீக்க வாய்ப்பில்லை. படிப்படியாகவே செய்யப்படும். மக்கள் நமது லைப்ஸ்டைலை மாற்ற வேண்டும். இந்த வைரஸ் நம்முடையே தான் இருக்கப்போகிறது. அதற்கேற்றார்போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். என்று கூறி உள்ளனர்.


இதன்மூலம் இன்னும் சிலகாலத்துக்கு லாக் டவுன் நீட்டிக்கப்படும் என்றே கருதப்படுகிறது. கொரோனா பரவல் வீதம் சமநிலைக்கு வரும்போது, அதாவது தீவிரமாக எண்ணிக்கை உயராத நிலை வந்த பின் மட்டுமே லாக் டவுன் நீக்கப்படுவது சாத்தியம் என்பது தெரியவருகிறது.


இருந்த போதிலும் நாளை மறுதினம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் தமிழகத்தில் லாக் டவுன் நீட்டிக்கப்படுமா? இல்லையா என்பது தெரியவரும். எது எப்படி இருந்தாலும், சென்னையில் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்றே கூறப்படுகிறது. 


தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சில கட்டுபபாடுகள் தளர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.  தொடர்ச்சியாக 14 நாட்கள் புதிய கொரோனா தொற்றே இல்லை என்ற நிலைதான், ஒரு மாவட்டத்தை கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெற வைக்கும். எனவே சமூக விலகல் மட்டுமே பரவலை கட்டுப்படுத்தும் என நம்பப்படுகிறது. 


Previous Post Next Post