திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ அவசர ஊர்திகளின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ நேற்று வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 மருத்து அவசர ஊர்திகள் மொத்தம் 38 உள்ளன. அதில் மொத்தம் 196 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு வழங்குதல் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ கலந்து கொண்டு மருத்துவ அவசர ஊர்தி ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமிநாசி, சோப்புகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை மருத்துவ அவசர ஊர்தி ஊழியர்கள் சங்கத் தலைவர் சந்தோஷ்குமார், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் ராமராஜன் ஆகியோரிடம் வழங்கினார்.
மேலும் அவர்களிடம் உரையாற்றும் போது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தினார். எந்த நேரத்தில், எந்த தேவைகள் வேண்டுமெனாலும் உடன செய்து தருவதாக வாக்களித்தார். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது மருத்துவ அவசர ஊர்தி ஊழியர்கள் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், திமுக மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டி.எம்.கலை, மாவட்ட அமைப்பாளர் கு.கணேஷ், பாலமுரளிகிருஷ்ணா உடன் இருந்தனர்.