கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் இன்றுடன் சேர்த்து 16,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் 2301 பேர். உயிரிழந்தவர் எண்ணிக்கை 519 ஆக உள்ளது.
தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1372 ஆக இருந்தது. இன்று 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உள்ளது. சென்னையில் 50 பேர், கோவை 5 பேர், திண்டுக்கல் 5 பேர், திருநெல்வேலி 2, செங்கல்பட்டு 3, மதுரை 2, தஞ்சாவூர் 10, நாகப்பட்டினம் 3, விழுப்புரம் 7, திருவள்ளூர் 5, கடலூர் 6, தென்காசி 4, விருதுநகர் 2, காஞ்சிபுரம் 1 என மொத்தம் 105 பேர் இன்று தொற்றுக்கு உள்ளாகினர்.
தமிழக அளவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 21,381 பேர். தனிவார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் 1,987 பேர். இன்னும் 2,411 பேரின் முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.
சென்னையில், 3 மருத்துவர்கள், ஒரு காவல் ஆய்வாளர், 2 பத்திரிகையாளர், ஒரு நீதிமன்ற பணியாளர் என 7 அத்தியாவசிய துறை பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிப்போர்ட்டர் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், வழக்கமாக தினமும் மாலை கொரோனா குறித்த அறிவிக்க நடத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. பத்திரிகை செய்தி குறிப்பு வழங்கப்பட்டது.