நாட்டின் 10 பொதுத்துறை வங்கிகள் இன்று முதல் 4 வங்கிகளாக இணைப்பு
இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. அலகாபாத் வங்கி கிளைகள், இனி இந்தியன் வங்கி கிளைகளாக செயல்படும்.
அதேபோல், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியன யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும்; சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைகிறது.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி இரண்டும், பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன.
இதன்மூலம், நாட்டில் பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது. பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, நாட்டின் 2வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி மாறி இருக்கிறது.
Tags:
தமிழகம்