நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., சசிமோகன் உத்தரவுப்படி, கூடுதல் எஸ்.பி., கோபி மேற்பார்வையில், ஊட்டி காவல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஊட்டி டவுன், குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கண்காணித்து, பொதுமக்கள் கூடுவதை தடுக்க அறிவுரை வழங்கவும், அத்தியாவசிய பொருள் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களை பள்ளியின் மைதானத்தில் அனைத்து கடைகளும் அமைக்கப்பட்டு, பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
போலீசாரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் எந்த பிரச்ச்சினையும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல முடிகிறது. மேலும் நோய்த்தொற்று பரவாமலும் தடுக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.