கொரோனாவைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நெல்லை ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் மருத்துவமனையில் பொதுமக்கள் கை கழுவுவதற்கு மூன்று இடத்தில் நிரந்தரமாக கை கழுவும் தொட்டிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இதனை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திரு.M.ரவிச்சந்திரன் அவர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். மேலும் மருத்துவமனைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு சோப்பு வழங்கப்பட்டு கைகளை கழுவும் முறை போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பணிகளை மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் கோமதிசங்கர், பாளை ஒன்றிய செயலாளர் ரங்காபாலன், நெல்லை மாநகர துணை செயலாளர் ரஜினி வீரமணிகண்டன் ஆகியோர் இணைந்து செய்தனர்.
இந்த விழிப்புணர்வு பணியில் மாநகரம் இணைச்செயலாளர் சிகாமணி, துணைச்செயலாளர் ராஜகோபால், செயற்குழு உறுப்பினர் சூர்யா கணேசன், பாளை மண்டல செயலாளர் மதியழகன், வள்ளியூர் ஒன்றிய செயலாளர் சண்முகம், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் ரஜினி சுடர், இணைச்செயலாளர் கவாஸ்கர், பாளை ஒன்றிய துணைச்செயலாளர் நாகராஜன் அலெக்ஸ், செயற்குழு உறுப்பினர் ஆனந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விநாயகம், பதர் பாய் மற்றும் மகளிர் அணியினர் மெர்சிசெல்வராஜ், மணிமாலா, விஜயா ஆகியோர் கலந்துகொண்டு கொரோனாவைரஸ் பரவாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.