விளையாடிய மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 144 தடை உத்தரவு மீறி கிரிக்கெட் விளையாடிய 12  மாணவர்களை எச்சரித்த காவலர்கள்.



நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் நாடு  முழுவதும் கோரோனோ தொற்றுநோயை தடுக்கும் பொருட்டு 144 ஊரடங்கு  தடை உத்தரவு அமலில் மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது.


 அது தொடர்பாக காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன 


இந்நிலையில் பொதுமக்கள் காரணமில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. 


அதுமட்டுமில்லாமல் மருத்துவமனைகள் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.



இந்நிலையில்  கடலூர்  மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அறிவுரைப்படி சிதம்பரம் உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர்  தலைமையில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர் 


மேலும் பேரிகாட் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் அமர்த்தப்பட்டு  மாவட்ட எல்லை பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 144 தடை உத்தரவு  மீறி 12 நபர்கள் கிரிக்கெட் விளையாட்டு  விளையாடிக்கொண்டு இருந்தனர்.


 தகவல் அறிந்த காவலர் அவர்களை அழைத்து கோரோனோ தொற்று நோய்  பற்றி அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பப்பட்டனர். 


இனி வரும் காலங்களில்  இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.


Previous Post Next Post