நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் கேரளாவில் இருந்து வந்த முருகன் என்பவர் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருடன் வந்த அவரது மனைவிக்கும் நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவருக்கும் இரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இன்று முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது.
தமிழகம் முழுவதும் தலைமை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் அருகே அடையகருங்குளத்தை சேர்ந்த தேங்காய் உறிக்கும் தொழிலாளியான முருகன் வயது 50 என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள கொல்லங்கோரு பகுதிக்கு வேலைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடன் வந்த அவரது மனைவிக்கும் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவருக்கும் இரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை மேற்கோள்ளப்பட உள்ளது. இதற்காக தனிமைப்படுத்தபட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே இரண்டு பேர் இந்த வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறி வீடு திரும்பிய நிமையில்
தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்க து...