திருப்பூர் பனியன் கம்பெனிகள் மூடல்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு திருப்பூரில்  பின்னலாடை நிறுவனங்கள் 31ம் தேதி வரை மூடப்படும். மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உடனான ஆலோசனைக்கு பிறகு ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் பேட்டி.


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை மத்திய மாநில அரசுகள் மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து அம்மாவட்டங்களை முடக்க உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் அருகில் உள்ள மாவட்டமாக திருப்பூர் உள்ளது.  திருப்பூரில் ஏற்றுமதி இறக்குமதி என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதன் உப நிறுவனங்களான சாய ஆலை, பிரிண்டிங், எம்ப்ராய்டரி, வாஷிங் என பல நிறுவனங்களும் அவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நிறுவனத்திலும் 50 முதல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ஏற்றுமதியும் 12000 கோடி உள்நாட்டு வர்த்தகம் என 48,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக திருப்பூர் விளங்கிவருகிறது. கோடை காலங்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறும் நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் 31ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படும் எனவும், வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி அவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு தான் ஏற்க வேண்டும். தற்போதைய சூழலில்  7200 கோடி நிதி சிக்கலில் ஏற்றுமதி நிறுவனங்கள் சிக்கிஉள்ளதாகவும் கடந்த மூன்று மாதங்களில்  ஏற்றுமதி செய்த 6 ஆயிரம் கோடி ரூபாய் தொகை இன்னும் வரவில்லை எனவும் 1200 கோடி ரூபாய் பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளதாகவூம் அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதை எங்களால் பார்த்துக் கொள்ள முடியும். ஊதியம் அரசு தான் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.  அரசு நிலுவை தொகைகளை நிறுவனங்களுக்கு விரைந்து வழங்க வேண்டும், கடன் தவணை செலுத்துவதில் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Previous Post Next Post