கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலிங்கியம், குருமந்தூர், அயலூர், அளுக்குளி ஆகிய   ஊராட்சியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் ஆலோசனையின்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக  அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள  மருத்துவர், செவிலியருக்கு முக கவசம், உடல் கவசம், கிருமி நாசினி  வழங்கப்பட்டது.பின்னர் லாரிகள் மூலம் கிருமி நாசினி சாலைகளில் தெளிக்க பட்டது.


இதில் மாவட்ட கவுன்சிலர் அனுராதா, கோபி யூனியன் சேர்மன் கே. பி. மௌதீஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமசந்திரன், அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஓம் பிரகாஷ்,  அளுக்குளி  ஊராட்சி மன்ற தலைவர் பி.இந்துமதிபாண்டு,கோட்டுபுள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், அயலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கன், துணை தலைவர் வேதநாயகி காந்திவேல், கலிங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அருள் ராமசந்திரன், ஊராட்சி கழக செயலாளர்கள் கே. பாண்டுரங்கசாமி, எம். பி. கோபால்,  ஒன்றிய அவை தலைவர் எம்.கே. குருசாமி  மற்றும் வார்டு உறுப்பினர்கள் பழனிசாமி, சாவித்ரி, சாமிநாதன், கோதாமணி, குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post