ஈரோடு மாவட்ட எல்லைகள் மூடல்: கோபியில் ஊரடங்கு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லைகளை போலீசார் மூடினர்.


 கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்று மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது.


அதைத்தொடர்ந்து ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையான தண்ணீர்பந்தல் பாளையம், குறிச்சி பிரிவு மற்றும் மொட்டணம் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட எல்லைகளை போலீசார் மூடினர்.


எல்லைகள் வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


நேற்று இரவு வரை வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கோபி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது, கோபி காவல்துறை,வருவாய் துறை, போக்குவரத்து காவல்துறை ,நகராட்சி அதிகாரிகள் கோபி நகர் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினர்.


Previous Post Next Post