ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் இலவச உணவு தானியம்: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி

 

 

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் வியாழனன்று நிருபர்களிடம் கூறியது;

 

கோவிட் 19 நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 22 மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அடங்கிய ஒரு தன்னார்வ தொண்டர் படையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் 2,36,000 பேர் அடங்கிய தொண்டர் படை களத்தில் இறக்கப்படுவார்கள். கேரளாவிலுள்ள 941 பஞ்சாயத்துகளில் தலா 200 பேர் வீதமும், 87 நகரசபைகளிக் தலா 500 பேர் வீதமும் இருப்பார்கள். இந்த தொண்டர் படையில் சேர சன்னதம் என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  இதற்காக இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் முன்வர வேண்டும்.

இவர்கள் பல்வேறு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். உணவு மற்றும் உணவுப்   பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவியாக தங்கியிருக்க வேண்டும். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் இவர்களுக்கான பயணச் செலவை உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும். இவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.  மருத்துவமனைகளில் நோயாளியுடன் இருப்பதற்காக இளைஞர் ஆணையம் ஒருநாளில் 1465 பேர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி உள்ளது ரேஷன் கார்டு இல்லாமல் வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவர்களது ஆதார் எண்ணை பரிசோதித்த பிறகு உணவு வழங்கப்படும் ரேஷன் கடைகளில் இவர் இருக்கக் கூடாது கூட்டுறவு அமைப்புகள் மூலம் நல்ல ஓய்வு ஊதியம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது தற்போது உள்ள சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்களை விலை கூட்டி விற்க அனுமதிக்க முடியாது. இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த வியாபாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. மொத்த வியாபாரிகளிடமிருந்து பொருட்களை சில்லறை வியாபாரிகளுக்கு கொண்டு செல்ல எந்த இடையூறும் இருக்காது. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தேவையான பொருட்களை இருப்பு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து உணவு பொருட்களை கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெளிமாநிலங்களில் இருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு தேவைப்பட்டால் இங்கிருந்து கான்வாய் அடிப்படையில் வாகனங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் உதவியும் கோரப்படும். கேரளாவில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளிகளை அவர்கள் தங்கும் இடங்களில் இருந்து வெளியேற்ற முயற்சி நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதை அனுமதிக்க முடியாது. அவர்களை தங்கும் இடங்களில் இருந்து இறக்கி விடுவதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதி, சிகிச்சை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தவேண்டும்.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்ள பிரதமரின் அறிவுரையின்படி மத்திய அமைச்சர் சதானந்த கவுடா டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். கேரளாவின் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அவர் முழு திருப்தி தெரிவித்துள்ளார் . இது மகிழ்ச்சி தரும் விஷயமாகும். கேரளாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தினமும் மத்திய அரசுக்கு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. தொழில் உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது. ஏற்கனவே மேற்கொண்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் நிதியும் பயன்படுத்தப்படும். நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது மற்ற வசதிகளையும் அரசு ஆலோசித்துள்ளது. கேரளாவில் உள்ள 879 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 69,434 படுக்கைகளும், 5607 அவசர சிகிச்சைப் பிரிவுகளும், 716 விடுதிகளில் உள்ள 15,333 அறைகளையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது லாக் டவுன் அமலில் இருப்பதால் உணவு கிடைக்காதவர்களுக்காக சமூக சமையலறை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்த பட்டுள்ளன. 43 உள்ளாட்சி அமைப்புகளில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 96 பஞ்சாயத்துகளில் 861 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 87 நகர சபைகளில் 84 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதன. 6 மாநகராட்சிகளில் ஒன்பது இடங்களிலும் சமூக சமையல் அறை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்களை பயன்படுத்தி உணவு விநியோகிக்கும் பணி தொடங்கப்படும். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை குறைக்க வேண்டும்.பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்க வெளியில் செல்ல உரிமை உண்டு. இவ்வாறு செல்பவர்கள் தங்களுடன் ஒரு உறுதிமொழி பாத்திரத்தை வைத்திருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் உடைகளை மருந்து கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் 2012 க்கு பின்னர் ஓய்வு பெற்ற 1640 டாக்டர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இவர்களுடைய அனுபவத்தையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற டாக்டர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். நர்சிங் மாணவர்களின் விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களது சேவையும் பயன்படுத்தப்படும்.  சுகாதார துறையினர் பயணம் செய்வதற்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் பயன்படுத்தப்படும். பி.எஸ் 4 வாகன பதிவு  தேதியை மார்ச் 31ல் இருந்து நீட்டிக்க மத்திய அரசிடம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு பெர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் விவசாய தேவைக்கான 4 சதவீத வட்டியில் வாங்கப்படும் கடனுக்கான தொகையை கட்டுவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31லிருந்து ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு்ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post Next Post