திருவண்ணாமலையில் உள்ள மலையானது 2668 உயரம் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவின் 10ம் நாளன்று இம்மலையில் மகாதீபம் ஏற்றப்படும். இதனைக் காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். மேலும் இம்மலையில் மூலகை செடிகள் மரங்கள் ஏராளமாக உள்ளது. தீபமலையை பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை - செங்கம் சாலையில் எமலிங்கம் எதிரே உள்ள மலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த திருவண்ணாமலை வனத்துறையினரும் சமூக ஆர்வலர்களும் விரைந்து வந்து தீயையணைத்தனர். இருப்பினும் தீயில் மலைமீது இருந்த அரியவகை மூலிகை செடிகள் எரிந்து சாம்பலானது தீபமலையில் தீவைத்தவர்கள் யார்? என்று திருவண்ணாமலை நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:
மாவட்ட செய்திகள்