விலைவாசி உயர்வு: அமைச்சர் ராஜலட்சுமி அதிரடி பேட்டி

விலைவாசி உயர்வு அமைச்சர் ராஜலட்சுமி அதிரடி பேட்டி


கொரோனா வைரஸ் கட்டுபடுத்துதல் தொடர்பாக பணிகள் மேம்பாடு குறித்து  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில் 
தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததன் காரணமாக கொரோனா நோய் தொற்று  வெகுவாக குறைந்துவிட்டது.


 ஒவ்வொரு நாளும் முதல்வர் சென்னையில் மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிடுகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை கூறி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரும் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.
வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அரசு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


 மார்க்கெட்டுகளில் அதிக பொதுமக்கள் கூட்டம் வருகிறது என்ற தகவல் வருகிறது. எனவே அதிக இடங்களில் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


தற்போதைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் ஒரு மணி நேரத்தில் டோக்கன் முறையில் 20 பேருக்கு ரூபாய் 1000 வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Previous Post Next Post